Sign-up for Newsletter

Music > Review
Charukesi's Survey
06 December, 2019

சாருகேசியின் ஆய்வு

இசை விமர்சகராகவும் மற்றும் அமுதசுரபி, கல்கி, தினமணி கதிர், ஆனந்த விகடன், குமுதம், கலைமகள் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ள தனது கதைகளின் எளிமையான நடை, கட்டுரைகளின் அறிவார்ந்த எண்ணங்கள், இவற்றின் வாயிலாகவும்  நம்மிடையே பிரபலமானவர் திரு சாருகேசி.

இவர் 2004-05 வருடங்களில் தனது சொந்த ஆர்வத்தில் இசை ரசிகர்களிடையே சில கேள்விகளைக் கேட்டு ஒரு ஆய்வை நடத்தியுள்ளார். இவற்றைக் கொண்டு ஒரு 20 வருடங்களுக்குப் பிறகு கர்நாடக இசை எப்படி இருக்கும் என்று அறிய முற்பட்டிருக்கிறார்.

அந்தக் கேள்விகள் பின்வருமாறு:

ரசிகர்களே!

1. நீங்கள் கர்நாடக இசையை ரசிக்கும்போது தெலுங்கு சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகள் குறுக்கிடுவதாக நினைக்கிறீர்களா?

2. கச்சேரிகளில் ராகம் தானம் பல்லவி இருப்பது அவசியமா?

3. ராகங்களின் ஒவ்வொரு பாட்டின் முன்பும் அதன் பெயரை அறிவிப்பது அவசியமா, அல்லது அவசியமில்லையா?

4. கர்நாடக சங்கீதத்தில் தமிழ் கீர்த்தனங்கள் நிறையப் பாடினால், இன்னும் நிறையப் பேர் ரசிக்க வருவார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

5. உங்கள் தராசுக்கோல்படி இன்றைக்கு யார் யார் முதல் படி, இரண்டாம் படி, மூன்றாம் படியில் இருப்பதாக நினக்கிறீர்கள்?

6. இன்னும் 10-20 வருடங்களுக்குப் பிறகு கர்நாடக இசைக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்று ஊகிக்கிறீர்கள்?

இந்தக் கேள்விகள் பல தரப்பட்ட ரசிகர்களிடம் கேட்கப்பட்டது.

 ஆய்வு மூலம் கிடைத்த செய்தி என்னவாகும்:

  • கர்நாடக இசையை ரசிக்க மொழி ஒரு தடையாக அமைவது இல்லை.
  • ராகம் தானம் பல்லவி பாடலாம். அதை ரசிக்கும் பக்குவம், அவகாசம் தேவை.
  • ராகங்களின் பெயரை அறிவிக்கத் தேவையில்லை. ஆனால் அறிவித்தால் பெரிய குற்றம் இல்லை.
  • தமிழ் கீர்த்தனைகள் பாடலாம். ஆனால் கூட்டம் அதிகம் வரும் என்று உறுதியாகக் கூற முடியாது. எது முக்கியம் என்றால் கிளாசிகல் சங்கீதத்தில் ஒரு ஆர்வம் இருக்க வேண்டும்.
  • கிட்டத்தட்ட இன்று முன்னணியில் இருக்கும் அத்தனை இளம் கலைஞர்களின் பெயர்களும் வந்துவிட்டன. அவர்களுக்காக நிச்சயமாக ஒரு கூட்டம் இருக்கிறது.
  • கர்நாடக சங்கீதம் இன்னும் 10-20 வருடங்களுக்கு வாழும். இதற்கு பதிலளிக்கையில்  அப்போதும் ”அன்னிக்கி இருந்த மாதிரி இன்னிக்கி இல்லையே” எனும் அங்கலாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்றார்கள் சிலர். இன்னும் சிலரோ வேக வேகமாப் பாடறாங்க. சவுக்க காலத்திலே பாடணும். அதுக்கு ஆளே இல்லாம போய்டுவாங்களோன்னு ஒரு எண்ணம் இருக்கு என்றனர். வேறு ஒருவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிறையப் பேர் பாட வந்தாலும் தரம் என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.  

இந்த ஆய்வு சார்ந்த கட்டுரையின் முடிவில்:

”எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், தோடியையும், கல்யாணியையும், ஹிந்தோளத்தையும் இன்ன பிற ராகங்களையும், இந்த ராகத்தில் அமைந்த சாஹித்யங்களையும் வரும் தலைமுறைகளில் சில ஆயிரம் பேர்களாவது உலகில் ஒவ்வொரு மூலையிலும் கேட்டு ரசித்துக் கொண்டே இருப்பார்கள். யாருடைய பெருமுயற்சியும் இல்லாமலேதான் இவை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன?” என்ற ஒரு எதிர்பார்ப்புடனும் பெருமிதத்துடனும் பேசியுள்ளார் சாருகேசி அவர்கள்.

திரு சாருகேசி அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அதாவது, ஜனவரி 30, 2019 அன்று காலமானார்.

(நன்றி: க்ருஷ்ண கான சபாவின் பழைய ஆவணங்கள்)

எஸ் சிவகுமார்

About Sabhash - Everything about classical music, dance, drama and a platform for inclusive entertainment

Sabhash.com is the one-stop destination for the latest news and information on the performing arts of India - classical music and dance, theatre, bhajans, discourses, folk performances, and other lesser known art forms. Institutions that revolve around the performing arts have exploded in numbers, and thanks to the Internet which has made information easily accessible, the number of rasikas has grown too. Corporate patronage has played a big part in increasing the world-wide reach of the Indian arts. Sabhash wishes to be a platform for inclusive growth giving an equal opportunity and recognition to not only the main performer but also the artistes who accompany them on stage, and the people who work backstage and play the role of unsung heroes.